திண்டுக்கல்லில் வாகனம் ஏற்றி லோடுமேன் படுகொலை

லோடுமேன் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டி ருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளால் உயிர்நாடியில் இடித்து சென்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி வண்டிப்பாதை பகுதியை சேர்ந்தவர் தர்மர் (வயது45). லோடுமேன் வேலை பார்த்து வந்தார். குடி பழக்கத்துக்கு அடிமையானவர்.

நேற்று இரவு அதே பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.அதன்பிறகு தர்மரை அந்த கும்பல் மோட்டார் சைக்கிளால் உயிர்நாடியில் இடித்து சென்று விட்டனர். இன்று காலை தர்மர் மயங்கிய நிலையில் கிடந்ததால் அவர் குடிபோதையில் இருக்கலாம் என நினைத்தனர்.

அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது ரத்தம் இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தர்மரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com