தேனி மாவட்டத்தில் மது விற்றவர்கள் கைது

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மதுவிற்றவர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தேனி போலீசார் பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற ஆண்டிபட்டி அருகே சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த ஆசை (வயது 46) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேனி மது விலக்கு போலீசார் பழனிசெட்டிபட்டி பகுதியில் மது விற்ற கோபி (43), காமராஜபுரம் பகுதியில் மது விற்ற அமராவதி (60), ஆகியோரை கைது செய்து 7 மற்றும் 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

போடி தாலுகா போலீசார் சங்கராபுரம் டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து சென்ற போது மது விற்ற பால்சாமி (75) என்பவரை கைது செய்து 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். உத்தமபாளையம் மது விலக்கு போலீசார் ரோந்து சென்ற போது உழவர் சந்தை அருகே மது விற்ற ராஜா (56), சின்னமனூர் பகுதியில் மது விற்ற சங்கிலி ராஜன் (40) என்பவரை கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

உத்தமபாளையம் போலீசார் உ.அம்மாபட்டி பகுதியில் ரோந்து சென்ற போது மது விற்ற ஜெயராஜ் (61) என்பவரை கைது செய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com