தேனி மாவட்டத்தில் மது விற்றவர்கள் கைது

தேனி மாவட்டத்தில் போலீசார் ரோந்து சென்றதில் அனுமதியின்றி மதுவிற்றவர்களை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகே மூலக்கடை டாஸ்மாக் கடை பகுதியில் கடமலைக்குண்டு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மலைச்சாமி(57) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஜெயமங்கலம் போலீசார் நடுப்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடை அருகே மதுவிற்ற செல்வம்(51) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மதுபாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்தனர்.

தேவதானப்பட்டி போலீசார் காளியம்மன் கோவில் அருகே ரோந்து சென்றபோதுஅங்கு மதுவிற்ற தங்கையா என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com