சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆயுள் தண்டனை கைதி திடீர் உயிரிழப்பு

கடந்த 2013-ம் ஆண்டு, பழனிசாமிக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த பழனிசாமிக்கு, இன்று அதிகாலை நெஞ்சுவலி அதிகமான நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆயுள் தண்டனை கைதி திடீர் உயிரிழப்பு
Published on

சேலம்:

சேலம் சின்ன சீரகாபாடி கடத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 73). இவர் ஆட்டையாம்பட்டி பகுதியில் கடந்த 1992-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு, பழனிசாமிக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய சிறையில் இருந்து வந்த பழனிச்சாமிக்கு, கடந்த 14-ந் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

சிறை காவலர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சையில் இருந்த பழனிசாமிக்கு, இன்று அதிகாலை நெஞ்சுவலி அதிகமான நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com