பழனி மின்இழுவை ரெயிலில் புதிய கம்பி வடம் பொருத்தும் பணி

3-வது மின்இழுவை ரெயிலை இயக்க உதவும் கம்பி வடக்கயிறு கடந்த மார்ச்மாதம் சேதமானது.ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் 480 மீட்டர் நீளம் உள்ள கம்பி வடக்கயிறுகள் 2 செட் வரவழைக்கப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்றது.
புதிய கம்பி வடக்கயிறு பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
புதிய கம்பி வடக்கயிறு பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
Published on

பழனி:

பழனி தண்டாயுதபாணிசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சிரமமின்றி சென்றுவர ஒரு ேராப்கார் மற்றும் 3 மின்இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 3-வது மின்இழுவை ரெயிலை இயக்க உதவும் கம்பி வடக்கயிறு கடந்த மார்ச்மாதம் சேதமானது.

இதனைதொடர்ந்து அந்த வின்ச் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. அதன்பிறகு ஜூலை மாதமும் இரும்பு வடக்கயிறில் பழுது ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டு பராமரிப்புகள் நடந்தது. தற்போது மீண்டும் அதே 3-வது மின்இழுவை ரெயில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் 480 மீட்டர் நீளம் உள்ள கம்பி வடக்கயிறுகள் 2 செட் வரவழைக்கப்பட்டது. அதில் ஒரு செட் கம்பி வடக்கயிறு பொருத்தும் பணி நடைபெற்றது. இதன்பின்னர் மின்இழுவை ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது.

சோதனை ஓட்டம் திருப்திஅளிக்கும் பட்சத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com