தேவதானப்பட்டியில் வக்கீலின் காரை உடைத்து கொலை மிரட்டல்

நிலக்கோட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிற. இவருக்கும் இவரது சித்தப்பாவுக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.ஊர் திரும்பிக்கொண்டிருந்தவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவரது கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேவதானப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையைச் சேர்ந்தவர் புரட்சி மணி (வயது 34). இவர் நிலக்கோட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது சித்தப்பாவுக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று புரட்சிமணி கெங்குவார்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு காரில் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த விஜய், புவனேஸ், திவாகர், முத்துராஜ், அருண், கண்ணன் ஆகியோர் புரட்சிமணியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவரது கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

மேலும் புரட்சி மணியை தாக்கியதில் அவரும் காயமடைந்தார். இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com