தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை

பிரசாந்த் தெர்மல் அனல் மின் நிலையத்தில் கடந்த 11 வருடங்களாக வேலை செய்து வந்தார்.நீண்ட நேரமாகியும் பிரசாந்த் திரும்பி வரததால் சக ஊழியர்கள் அவரை தேடி சென்றனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தெர்மல்நகர் கோவில்பிள்ளை நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 33). இவர் தெர்மல் அனல் மின் நிலையத்தில் மெக்கானிக்கல் பிரிவில் ஒப்பந்த ஊழியராக கடந்த 11 வருடங்களாக வேலை செய்து வந்தார்.

நேற்று நள்ளிரவு இரவு பணியில் இருக்கும்போது பிரசாந்த் அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரததால் அவரை தேடி சக ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரசாந்த் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி யுள்ளார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்பு படையினர் உதவியுடன் பிரசாந்த் உடலை மீட்டனர். இதுகுறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com