சின்னமனூரில் ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி சாவு

சின்னமனூர் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 33). இவர் தனது உறவினர் மாறன் (57) என்பவருடன் வேலை நிமித்தமாக சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

சின்னமனூர் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com