குவைத் விமானம் தாமதம்: சென்னை விமான நிலையத்தில் 5 மணிநேரம் தவித்த பயணிகள்

பயணிகள் 172 பேரும் சென்னையில் விமான நிலையத்தில் சுமார் 5 மணிநேரம் தவித்தனர்.5 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு விமானம் சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்டு சென்றது.
குவைத் விமானம் தாமதம்: சென்னை விமான நிலையத்தில் 5 மணிநேரம் தவித்த பயணிகள்
Published on

குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை,1.20 மணிக்கு வரும் விமானம் மீண்டும் அதிகாலை 2.05 மணிக்கு சென்னையில் இருந்து குவைத் புறப்பட்டு செல்லும். அந்த விமானத்தில் குவைத் செல்ல 172 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் குவைத்தில் இருந்து வரவேண்டிய விமானம் எந்திர கோளாறு காரணமாக தாமதமாக வந்து குவைத்துக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் 172 பேரும் சென்னையில் விமான நிலையத்தில் சுமார் 5 மணிநேரம் தவித்தனர்.

பின்னர் அந்த விமானம் காலை 6 மணிக்கு தாமதமாக சென்னை வந்தது. இதைத்தொடர்ந்து 5 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு விமானம் சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்டு சென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com