குன்னத்தூர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா

விநாயகர் கடை வீதி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பரம்பரை தர்ம கர்த்தா செய்திருந்தனர்.
குன்னத்தூர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
Published on

குன்னத்தூர்:

குன்னத்தூர் விநாயகர் கடை வீதி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை மகா கணபதி வழிபாடு, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, பூஜைகள், நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 8.15 மணிக்கு மேல் கோபுர விமான கலசம் கும்பாபிஷேகம் தொடர்ந்து விநாயகர், மூலவர், பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், நவகிரகம் , இடும்பன் ஆகிய தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து தசதானம், தசா தரிசனம், மகா அபிஷேகம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பரம்பரை தர்ம கர்த்தா செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com