ஓசூரில் கரடிகுடி மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

கோவில் புதிப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஓசூரில் கரடிகுடி மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா
Published on

ஓசூர்,

ஓசூர் நெசவாளர் தெருவில் உள்ள மிகவும் பழமையான கரடிகுடி காரியசித்தி மகா கணபதி மற்றும் வீராஞ்சநேய சாமி கோவில் புதிப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழா நிகழ்ச்சிகள் கடந்த திங்கட்கிழமை, கணபதி பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு ஹோம நிகழ்ச்சிகள், பூர்ணஹூதி, கலச ஸ்தாபனம் வாஸ்து ஹோமம் சுதர்சன ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக, நேற்று (செவ்வாய்கிழமை) கோ பூஜை, ருத்ராபிஷேகம், அதர்வாபிஷேகம் மற்றும் ஹோமங்கள், சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், மகா கணபதி மற்றும் வீராஞ்சநேய சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை செய்து, சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், நெசவாளர் தெரு மற்றும் ஓசூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com