பல்லடம் வட்டார முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை

16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பல்லடம் வட்டார முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை
Published on

பல்லடம் :

பல்லடம் தண்டாயுதபாணி கோவில், பொன் காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சந்தனம்,பால்,தயிர்,தேன், உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com