தருமபுரி, கிருஷ்ணகிரி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகர் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகரை படத்தில் காணலாம்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகரை படத்தில் காணலாம்.
Published on

கிருஷ்ணகிரி:

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 6  மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 

இதையொட்டி விநாய கருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். 

சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.

இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம், வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகர் கோவில் என பல் வேறு விநாயகர் கோவில் களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதே போல் தருமபுரி மாவட் டத்தில் அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 

இதில் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். தருமபுரி எஸ்.வி.சாலையில் உள்ள விநாயகர் கோவிலில்  சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com