மாசாணியம்மன் கோவில் மயான பூஜை

ஓசூர் மாசாணியம்மன் கோவிலில் மயான பூஜை மற்றும் குண்டம் விழா நடைபெற்றது.
வாயில் எலும்பை கடித்தவாறு பூசாரி அருள்வாக்கு கூறிய காட்சி.
வாயில் எலும்பை கடித்தவாறு பூசாரி அருள்வாக்கு கூறிய காட்சி.
Published on

ஓசூர்:

ஓசூர் பாகலூர் சாலையில் சமத்துவதும் அருகே ஸ்ரீ மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு 5-ஆம் ஆண்டு மயான பூஜை மற்றும் குண்டம் விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த 1-ந் தேதி கொடியேற்றம் மற்றும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது பின்னர், கடந்த 14-ந் தேதி ஓசூர் தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளம் அருகிலிருந்து பால்குட மற்றும் பூகரக ஊர்வலமும், அம்மனின் பல்லக்கு ஊர்வலமும் நடைபெற்றது. 

மேலும் திரளான பக்தர்கள் அலகு குத்தியவாறு, ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.நேற்று முன்தினம்(15-ந்தேதி) இரவு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மயான பூஜை செய்து, கோவில் பூசாரி பாண்டியன் வாயில் எலும்பை கடித்தவாறும், கையில் சூலாயுதம் ஏந்திக்கொண்டும் அருள் வந்து ஆடினார். 

மேலும், பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். மயான பூஜை நிகழ்ச்சியை காண்பதற்காக, ஓசூர், சமத்துவபுரம், நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்களும், பொதுமக்களும் திரளாக வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com