நாகர்கோவிலில் லாரி ஒர்க் ஷாப்பில் தீ விபத்து

2 மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
தீ கொழுந்து விட்டு எரிவதை படத்தில் காணலாம் 
தீ கொழுந்து விட்டு எரிவதை படத்தில் காணலாம் 
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.

இவர் ஏ.ஆர். கேம்ப் ரோட்டில் லாரி ஒர்க் ஷாப் வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் மாரியப்பன் ஒர்க் ஷாப்பை திறந்து பணியில் ஈடுபட்டார். வேலை முடிந்து இரவு 7.45 மணிக்கு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு மாரியப்பன் வீட்டிற்கு சென்றார். இரவு 9.30 மணி அளவில் அவரது ஒர்க் ஷாப்பில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாரியப்பன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

நாகர்கோவில் தீய ணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது லாரி ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்க ளும் அங்கு நின்ற லாரியும் தீயில் எரிந்தது.தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத் திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

லாரி ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com