வீட்டில் இருந்த வாலிபர் மாயம்

வீட்டில் இருந்த வாலிபர் மாயமானர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்தார்
வீட்டில் இருந்த வாலிபர் மாயம்
Published on

கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த, மணியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 45). இவரது மகன் சதீஷ்குமார்(வயது 25). இவர் சின்னப்பனையூர், மின்துறை அலுவலகத்தில், ஒப்பந்த வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று, கல்யாணி, கணவர் நாகராஜ் ஆகிய இருவரும் வெளியூர் சென்றனர். மறுநாள் அதிகாலையில் வந்து பார்த்தபோது, சதீஷை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தோகைமலை போலீசில் கல்யாணி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com