சிவன் கோவில்களில் பைரவ வழிபாடு

சிவன் கோவில்களில் பைரவ வழிபாடு நடைபெற்றது 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது
சிவன் கோவில்களில் பைரவ வழிபாடு
Published on

கரூர்:

கரூர் தவிட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சியில் சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய் பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல், வேலாயுதம் பாளையம் பகுதிகளில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் உள்ள காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com