குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை

குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்கணவன்- மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது
குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை
Published on

கரூர்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லை ஊராட்சி சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 45). கூலி தொழிலாளியான இவர், தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபடுவாராம்.

இதே போல் சம்பவத்தன்று வடிவேல் குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மனவிரக்தியில் வடிவேல் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு தோகைமலை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com