வீட்டில் இருந்த பெண் மாயம்

வீட்டில் இருந்து வெளியேறியவரை தேடி வரும் போலீசார்
வீட்டில் இருந்த பெண் மாயம்
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபி மகள் லட்சுமி. இவர் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த லட்சுமியின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரது தாய் வேம்பாயி வெள்ளியணை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com