வளர்பிறை அஷ்டமி பைரவருக்கு சிறப்பு வழிபாடு

வளர்பிறை அஷ்டமி பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றதுதிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வளர்பிறை அஷ்டமி பைரவருக்கு சிறப்பு வழிபாடு
Published on

கரூர்:

வளர்பிறை அஷ்டமியை ஒட்டி, கரூர் தோட்டக்குறிச்சி, சேங்கல் மலை அடிவாரத்தில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை ஒட்டி பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் மண்மங்கலம், நஞ்சை புகழூர், காகிதபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com