அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.18 வகையான வாசனை திரவியங்களால் நடைபெற்றது
அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
Published on

கரூர்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது

X

Maalai Malar
www.maalaimalar.com