என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண் சிகிச்சை சிறப்பு முகாம்
- 40 பேருக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது.
- கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.
கரூர்
தரகம்பட்டி அருகே உள்ள வரவனை கிராமம் வேப்பங்குடியில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி தொடங்கி வைத்தார். தனியார் கண் மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சிறந்த முறையில் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தனர். முகாமில் மொத்தம் 98 பேருக்கு இலவச கண் பரிசோதனை நடைபெற்றது. இதில் கிட்டப்பார்வை குறைபாடுகள் உள்ள 40 பேருக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது.
Next Story






