நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் - பயனாளிகளுக்கு இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்

நலிவுற்ற வியாபார குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் உயர்வு பெறும் வகையில் காய்கறி விற்பனை தள்ளுவண்டி மானியத்துடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது நடமாடும் காய் கனிகள் விற்பனை வண்டிகளை இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினார்.
நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் - பயனாளிகளுக்கு இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்
Published on

கரூர் :

குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காய் கனிகள் விற்பனை செய்து வரும் நலிவுற்ற வியாபார குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் உயர்வு பெறும் வகையில் தோட்டக்கலை சார்பாக ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காய்கறி விற்பனை தள்ளுவண்டி ரூ.15000 மானியத்துடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி உதவி இயக்குனர், வேளாண்மை துறை அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பாக நடமாடும் காய் கனிகள் விற்பனை வண்டிகளை இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினார.

தொடர்ந்து தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளுக்கும் நடமாடும் காய் கனிகள் விற்பனை வண்டிகள் வழங்குவதாக தோட்டக்கலை துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. விழாவில் குளித்தலை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சூரியனூர் சந்திரன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், குளித்தலை நகர் மன்ற உறுப்பினர் சந்துரு, வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com