பூட்டிய வீட்டுக்குள் தம்பதி உடல்

பூட்டிய வீட்டுக்குள் தம்பதி இறந்து கிடந்தனர்.வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கவில்லை
பூட்டிய வீட்டுக்குள் தம்பதி உடல்
Published on

கரூர்:

கரூர் ஜவஹர் பஜாரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 76). ஓய்வுப்பெற்ற வங்கி ஊழியர். இவர் மனைவி லட்சுமி (69). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். லட்சுமி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அவர்களது உறவினர் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளார். அப்போது லட்சுமி படுக்கையிலும், ராமகிருஷ்ணன் சமையலறையிலும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com