சின்னதாராபுரத்தில் கல்லுாரி மாணவி தற்கொலை

சின்னதாராபுரத்தில் கல்லுாரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்கவிதா, மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்தி வந்துள்ளார்
சின்னதாராபுரத்தில் கல்லுாரி மாணவி தற்கொலை
Published on

கரூர்:

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே, நஞ்சை காளக்குறிச்சியை சேர்ந்த கருப்புசாமி மகள் கவிதா, 18. இவர், கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில், பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வந்தார். கவிதா, மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்தி வந்துள்ளார். இதை, அவரது தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கவிதா, விஷம் குடித்தார். அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com