திரை வண்ணார் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் பெறலாம் -கலெக்டர் தகவல்

புதிரை வண்ணார் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திரை வண்ணார் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் பெறலாம் -கலெக்டர் தகவல்
Published on

கரூர்:

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

புதிரை வண்ணார் இன மக்களை பொருளாதார சமூக கல்வி நிலைகளில் மிகவும் அடித்தளத்தில் வாழ்ந்து வருவதால் தமிழக அரசு புதிரை வண்ணார் இனத்தைச் சார்ந்த மக்களை மேம்படுத்தும் வகையில்

தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் அமைக்கப்பட்டு அதில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள 18 வயது நிறைவடைந்த ஆனால் 60வயது நிறைவடையாமல் உள்ளவர்கள் புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராகலாம்.

இந்த புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினர்களுக்கு விபத்து உறுதி திட்டத்தின் கீழ் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, சடங்கு செலவிற்கான உதவித்தொகை,

கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக்கண்ணாடி செலவு தொகையை ஈடு செய்தல் மற்றும் முதியோர் ஓய்வூதியம் (மாதம்தோறும்) வழங்கப்படும்.

எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலெக்டர் அலுவலகம் கரூர் 639 007 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com