என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம்
- குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது
- புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை நடைபெற்றது
குளித்தலை,
குளித்தலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவுக்கிணங்க கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழிகாட்டுதலின்படி குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.சூரியனூர் ஊராட்சி, பொய்யாமணி ஊராட்சி பங்களாபுதூரிலும், திம்மம்பட்டி ஊராட்சி கணக்கபிள்ளையூரிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத்தில் 10,000 உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என்று ஒன்றியசெயலாளர் கருணாகரன் கூறினார்.கூட்டத்தில் குளித்தலை கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளரும், பொய்யாமணி ஊராட்சி மன்ற தலைவருமான பாலன், ஒன்றிய குழு உறுப்பினர் கௌரி பழனிச்சாமி, ஒன்றிய அவைத் தலைவர், கல்லை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கலிங்கப்பட்டி ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ராஜா மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு, கிளை கழக செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.