என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது போதையில் பிரச்சனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை- எஸ்.பி.சுந்தரவதனம் எச்சரிக்கை
- கரூரில் குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் சோதனை
- மது போதையில் பிரச்சனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி.சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
கரூர்:
பொங்கல் பண்டிகை தினத்தில் மது போதையில் பிரச்சனை, அதிவேகமாக வாகனம் ஓட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி.சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்றவாளிகள் மற்றும் பதிவேட்டு குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் சோதனையிட்டனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கூறியதாவது:பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் எவ்வித இடையூறுமின்றி கொண்டாடும் வகையில் பதிவேட்டு குற்றவாளிகளின் வீடுகளில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் என கண்டறியப்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் மற்றும் ஜாதி ரீதியாக பிரச்னைக்குரிய இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை தினங்களில் மது போதையில் பிரச்சனை செய்தாலோ, வாகனங்களில் அதிகவேகமாக பயமுறுத்தும் வகையில் சென்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






