பேருந்தில் சங்கிலி திருடிய 2 ெபண்கள் கைது

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் பேருந்தில் சங்கிலி திருடிய 2 ெபண்கள் கைது ெசய்யப்பட்டனர்.
பேருந்தில் சங்கிலி திருடிய 2 ெபண்கள் கைது
Published on

கரூர்:

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் அகிலம்மாள் (வயது 52). இவர், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடல் பரி சோதனை செய்ய வந்தார். பின்னர் குளித்தலை சுங்ககேட்டிலிருந்து அய்யர்மலைக்கு பஸ்சில் சென்றார். அய்யர்மலையில் இறங்கி பார்த்த போது, அகிலம்மாள் அணிந்திருந்த 3 பவுன் செயினை காணவில்லை. இது குறித்து குளித்தலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் குளித்தலை பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம், குட்டை கிராமத்தை சேர்ந்த காவேரி (35), அதே ஊரை சேர்ந்த சோலையம்மாள் (30), ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அகிலம்மாள் செயின் திருட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com