search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்
    X

    குமரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்

    • மேற்பார்வை குழுவுக்கு கலெக்டர் உத்தரவு
    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு எந் தவித இடையூறும் ஏற்படுத் தாத வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, போலீஸ் நிலையங்களிலுள்ள நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர், பத்மநாபபுரம் சப்-கலெக் டர், மாவட்ட ஊராட்சித்தலைவர், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி உதவி இயக்குநர், தேசிய தகவல் மைய மேலாளர் (நிக்) கொண்ட மாவட்ட அள விலான மேற்பார்வை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டம், கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், பத்மநாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட தக்கலை, குளச்சல், மணவாளக்குறிச்சி, இரணியல், கருங்கல் ஆகிய போலீஸ் நிலையங்களில் பொருத் தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வின் செயல்பாடுகள் குறித்து பத்மநாபபுரம் சார் ஆட்சியரும், நாகர் கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார், வடசேரி, ஆசாரிபள்ளம், நேசமணி நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் குறித்து நாகர்கோவில் வருவாய் கோட்டாட் சியரும் ஆய்வு மேற்கொண்டதில் அதிக திறன் கொண்ட கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், பதிவான காட்சிகள் தெளிவாக இருக்க வேண்டுமென கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் பேசிய கலெக்டர், அனைத்து போலீஸ் நிலையங்களிலும், கண்காணிப்பு கேமரா பொருத் தப்பட்டுள்ளது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க மேற்பார்வை குழு வினருக்கு உத்தரவிட் டார்.

    இக்கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 33 சட்ட ஒழுங்கு பராமரிக்கும் போலீஸ் நிலையங்களும்,4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், வெளிப்ப டைத்தன்மையாக போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வரு கிறது என்றும் எஸ்.பி. தெரி வித்தார்.

    இக்கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட் சியர் சேதுராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, உதவி இயக்குநர் (பேரூராட்சி கள்) விஜயலெட்சுமி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, நகராட்சி ஆணையாளர்கள், நாகர் கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், உசூர் மேலாளர் (குற்றவியல் ) சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×