search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் சாவு
    X

    திருவட்டார் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் சாவு

    • பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவராண நிதி
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சோம்ராஜ் (வயது 55), வாழைத்தார் வியாபாரி. இவரது மனைவி ஜெயசித்ரா (45). மகன் அஸ்வின் (21), மகள் ஆதிரா (24) ஆகியோர் நேற்று வீட்டில் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நேற்று பெய்த காற்று-மழை காரணமாக இவர்களது வீட்டு பக்கத்து வீட்டிலிருந்த மின்சார வயர் அருகிலுள்ள தகர மேற்கூரையில் பட்டபடி இருந்துள்ளதும் அந்த நேரத்தில் அஸ்வின் எடுத்து வந்த இரும்பு கம்பி, தகர மேற்கூரையில் பட்டதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததும் தெரியவந்தது. மேலும் அவரை தாய் ஜெயசித்ரா மற்றும் சகோதரி ஆதிரா ஆகியோர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றபோது அவர்களும் மின்சாரம் தாக்கி பலியாகி இருப்பதும் தெரியவந்தது.

    பலியான ஆதிரா 8 மாத கர்ப்பிணி என்பது வேதனையான சம்பவமாக அமைந்தது. இந்த சம்பவத்தில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டது. அவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் குளச்சலை சேர்ந்த ஸ்ரீசுதன் என்பவருடன் திருமணமாகி உள்ளது.

    கர்ப்பிணியான ஆதிரா வளைகாப்புக்கு பிறகு பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது தான் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். அவரது கணவர் ஸ்ரீசுதன், ஆந்திர மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து உடனடியாக ஊருக்கு புறப் பட்டுள்ளார். இதற்கிடையில் பலியான 3 பேரின் உடல்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.

    அதன்பிறகு கல்லூரி மாணவன் அஸ்வின், தாய் ஜெயசித்ரா ஆகியோரது உடல்கள் ஆற்றூரில் உள்ள அவர்களின் வீட்டின் அருகில் அடக்கம் செய்யப் படுகிறது. கர்ப்பிணி பெண் ஆதிராவின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப் பட்டு குளச்சலில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்கிடையில் மின்சா ரம் தாக்கி கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் இறந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரி வித்துள்ளார். இந்த துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    குடும்பத்தினரை இழந்து வாடும் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரி வித்துக்கொள்வ தோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தர விட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×