மேலசங்கரன்குழி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மேலசங்கரன்குழி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கன்னியாகுமரி:

மணவாளக்குறிச்சி பரப்பற்று பகுதியை சேர்ந்தவர்  அருண் பிரபு (வயது 29).  கூலி  தொழிலாளி. இவர் நேற்று இரவு மேலசங்கரன்குழியிலிருந்து இருந்து பேயோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக  மின்கம்பத்தில் மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  

விபத்தை கண்ட  அக்கம் பக்கத்தினர்  108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் பிரபு பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான அருண் பிரபுக்கு திருமணமாகி ரதி என்ற மனைவியும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். 

இச்சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com