இடலாக்குடியில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இடலாக்குடியில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் அருகே சுங்கான் கடை திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 61). இவரது சகோதரர் கணபதி (52). இருவரும் கோட்டார் இடலாக்குடி பகுதியில் கட்டிட வேலை செய்தனர்.

அப்போது சொக்கலிங்கம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சொக்கலிங்கத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கோட்டார் போலீசில் கணபதி புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com