search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே  கால்வாயில் தண்ணீர் திறப்பு
    X

    கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட காட்சி. 

    குளச்சல் அருகே கால்வாயில் தண்ணீர் திறப்பு

    • பொதுமக்கள் போராட்ட அறிவிப்பு
    • அப்பகுதிகளுக்கு அணை நீர் செல்லாததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ளது லட்சுமிபுரம் சானல். பேச்சிப்பாறை அணை நீர் இந்த சானல் வழியாக லட்சுமிபுரம், கருமங்கூடல், நடுவூர்க்கரை, மண்டைக்காடு, உடையார்விளை, செம்மண்குளம், அஞ்சாலி, சிராயன்விளை, கோணங்காடு ஆகிய விவசாய நிலங்களுக்கு பாய்ச்சப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து விடப்பட்ட அணை நீர் உடையார்விளை, செம்மண்குளம், அஞ்சாலி ஆகிய பகுதிகளுக்கு செல்லவில்லை. லட்சுமிபுரம் சானலில் குளச்சல் பிரிவு ஷட்டர் திறக்கப்படாததே இதற்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர். தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் அப்பகுதிகளுக்கு அணை நீர் செல்லாததால் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து அப்பகுதிக்கு தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி கல்லுக்கூட்டம் பேரூராட்சி கவுன்சிலர்கள் டோமினிக் ததேயூஸ், ரூபன் பொன்மணி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் லட்சுமிபுரம் சானல் சந்திப்பில் போராட்டம் நடத்த கூடினர்.

    இது குறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து தண்ணீர் விட உத்தரவிட்டனர். இதையடுத்து சானல் ஊழியர் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து விட்டார். இதனால் செம்மண்குளம், உடையார்விளை, அஞ்சாலி, சிராயன்விளை, கோணங்காடு ஆகிய பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    Next Story
    ×