ராஜாக்கமங்கலம் யூனியனில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி - கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு

காற்றாடிதட்டு குக்கிராமத்தில் 61 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நிர்வாக அனுமதிஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஆதாரத்தினை ஆய்வு செய்யப்பட்டது
ராஜாக்கமங்கலம் யூனியனில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி - கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு
Published on

நாகர்கோவில் :

ராஜாக்கமங்கலம் யூனியன், தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட காற்றாடிதட்டு பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2022-23-ம் ஆண்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தர்மபுரம் ஊராட்சியில் காற்றாடிதட்டு குக்கிராமத்தில் 61 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நிர்வாக அனுமதி பெறப்பட்டது. இதில் 52 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. 9 வீடுகளுக்கு ஏற்கனவே குடிநீர் ஆதாரம் உள்ளது. இன்று கலைசெல்வி மற்றும் கிருஷ்ண தங்கம் ஆகியோ ரது வீடுகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஆதாரத்தினை ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com