search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பு அருவி பகுதியில் கண்காணிப்பு கோபுரம் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
    X

    திற்பரப்பு அருவி பகுதியில் கண்காணிப்பு கோபுரம் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை

    • சுற்றுலாப் பயணிகளின் நகைகள் உள்பட விலை உயர்ந்தப் பொருள்கள் கார்களிலிருந்து திருடப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது
    • அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அவை செயலிழந்து போயின.

    கன்னியாகுமரி :

    திற்பரப்பு அருவிக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இதர மாநிலங்களிலிருந்தும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இதில் குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இங்குவரும் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.

    இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகளின் நகைகள் உள்பட விலை உயர்ந்தப் பொருள்கள் கார்களிலிருந்தும், இதர குளிக்கும் பகுதியிலிருந்தும் திருடப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருவிப்பகுதிகளைக் கண்காணிக்கும் வகையில் இங்கு அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அவை செயலிழந்து போயின.

    இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தலைமையில் தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் நேற்று அருவிப் பகுதியில் ஆய்வு செய்தனர். இதையடுத்து பிரதான சாலையிலிருந்து அருவிக்கு செல்லும் நுழைவுப் பகுதி முதல் வாகனங்கள் நிறுத்தப்படும் கடைசி எல்லைப் பகுதி வரை கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கவும், வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தின் மத்தியில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான அறிக்கைகளை மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்கவும், மாவட்ட சூப்பிரண்டு, தக்கலை துணை சூப்பிரண்டு கணேசனுக்கு உத்தரவிட்டார்.

    Next Story
    ×