ஸ்கேட்டிங் போட்டியில் வின்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி

3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியபோது  எடுத்த  படம்.  
மாணவர்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியபோது எடுத்த படம்.  
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்துவதற்கு தகுதியான 200 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. இது தென் தமிழகத்தில் மிகப்பெரிய மைதானம் ஆகும். இம்மைதானத்தில் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற தகுதியான போட்டியாளர்களை குமரி மாவட்ட அளவில் தேர்வு செய்யும் தகுதி சுற்று நடைபெற்றது.

சென்னை தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் -ம் இணைந்து குமரி மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் ஸ்கட்டிங் போட்டிகளை நடத்தின. குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வின்ஸ் பள்ளி மாணவர்களும் பங்கேற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். மாணவர்கள் பிபின்குமார், பபின்குமார், ஹாட்ரியல் வின்சென்ட் ஆகியோர் வயது அடிப்படையிலான போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் கோப்பை, பதக்கம் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். மேலும் அவர்கள் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.

போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் செயலாளர் குமார் ஜேசுராஜன் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com