

நாகர்கோவில் :
அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட செங்குளம், செட்டிக்குளம் மற்றும் நீர்நிலை ஓடைகளில் ஆகாய தாமரை படர்ந்து காணப்பட்டது.
இந்த நிலையில் ஆகாய தாமரைகளை அகற்றும்படி அழகப்பபுரம் பேரூராட்சி தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ், துணை தலைவர் ஆண்ட்ரூஸ் மணி ஆகியோர் விஜய்வசந்த் எம்.பி.க்கு மனு அளித்தனர். அதன் அடிப்படையில் விஜய்வசந்த் எம்.பி. நேரடியாக ஆய்வு செய்து தனது சொந்த நிதியில் இருந்து குளங்கள் மற்றும் நீர்நிலை ஓடைகளில் ஆகாயத்தாமரை மற்றும் முட்புதர்களை அழகப்பபுரம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் அகற்றும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., அழகப்பபுரம் பேரூராட்சி தலைவி அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத்தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, வார்டு கவுன்சிலர் கள் கிறிஸ்டி, ஜஸ்டின், மலர்கொடி, வட்டார காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் ஜெய்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.