search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோதநல்லூர் அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் பாதுகாப்பான வன பகுதியில் கொண்டு விடப்பட்டது
    X

    கோதநல்லூர் அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் பாதுகாப்பான வன பகுதியில் கொண்டு விடப்பட்டது

    • வீடுகளுக்குள் இருந்த பொருட்களை குரங்குகள் எடுத்து சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி
    • 10 குரங்குகள் பிடிபட்டதையடுத்து பொதுமக்கள் நிம்மதி பெரும் மூச்சு விட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    மேக்காமண்டபம் கோதநல்லூர் அருகே மாராங்கோணம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.

    இந்த குடியிருப்புகளுக்குள் அடிக்கடி குரங்குகள் புகுந்து வந்தது. மேலும் வீடுகளுக்குள் இருந்த பொருட்களை குரங்குகள் எடுத்து சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதையடுத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளிமலை வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து அந்த குரங்கு களை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். குரங்கு களை பிடிக்க அந்த பகுதி யில் கூண்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

    நேற்று காலை அந்த பகுதி யில் கூண்டுகள் வைக்கப் பட்டது. அப்போது அங்கு வந்த 10 குரங்குகள் கூண்டுக்குள் சிக்கியது. கூண்டுக் குள் குரங்குகள் சிக்கியதை யடுத்து அந்த குரங்குகளை மீட்க வனத்துறை அதிகா ரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர். கூண்டுக்குள் சிக்கிய 10 குரங்குகளையும் வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

    பின்னர் அந்த குரங்கு களை வேளிமலை சரகத் துக்குட்பட்ட பாதுகாப்பான வனப் பகுதிக்கு கொண்டு விட்டனர். ஒரே இடத்தில் 10 குரங்குகள் பிடிபட்டதையடுத்து பொதுமக்கள் நிம்மதி பெரும் மூச்சு விட்டுள்ளனர்

    Next Story
    ×