search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீச் ரோட்டில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து - பொதுமக்கள் பரிதவிப்பு
    X

    பீச் ரோட்டில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து - பொதுமக்கள் பரிதவிப்பு

    • துர்நாற்றம் வீசுவதால் குப்பை கிடங்கை மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்
    • தீயணைப்பு வீரர்கள் கூட்டாக இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது.அங்கு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது.

    இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படு வதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் துர்நாற்றம் வீசுவதால் குப்பை கிடங்கை மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர். இதையடுத்து குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ கொளுந்து விட்டு எரிந்ததை பார்த்த மாநக ராட்சி ஊழியர்கள் நாகர் கோவில் தீய ணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவித்த னர். நாகர்கோவில் தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடி யவில்லை. இதையடுத்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வரவழைக்கப் பட்டனர்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் கூட்டாக இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். என்றாலும் குப்பை கிடங்கின் ஒரு பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. தீய ணைப்பு வீரர்கள் தீயணைக்க போராடி னாலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத் திற்கு ஆளாகி உள்ள னர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன், என்ஜினியர் பாலசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு சென்று பார்வை யிட்டனர். குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை விரைந்து அணைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. தீ விபத்து ஏற்ப டும்போது புகையால் இந்த பகுதி மக்கள் பரித விப்பிற்கு ஆளாகி வரு கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். துர்நாற்றமும் வீசி வருகிறது.

    எனவே இந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி மேயர் உடனடி நடவடிக்கையாக இந்த குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தான் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற் பட்டு இருந்த நிலையில் மீண்டும் அங்கு தீ விபத்து ஏற்பட்டி ருப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×