மார்த்தாண்டம் அருகே ஆசிரியர் மர்மச்சாவு

சாலையில் உடல் கிடந்ததால் பரபரப்புபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன
மார்த்தாண்டம் அருகே ஆசிரியர் மர்மச்சாவு
Published on

கன்னியாகுமரி :

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் பாலாசிங் (வயது 52). இவர் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரித்து வருகிறார். இவரது மனைவி பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையின் ஓரத்தில் மர்மமான முறையில் பாலாசிங் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ெதாடர்ந்து உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத் துள்ள னர்.

இதுகுறித்து மார்த் தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியரின் உடல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com