search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ஆவணி திருவிழா
    X

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ஆவணி திருவிழா

    • இன்று காலை கொடியேற்றம்
    • மார்கழி, சித்திரை, மாசி, ஆவணி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி, சித்திரை, மாசி, ஆவணி ஆகிய மாதங்களில் திருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதையொட்டி ஆவணி திருவிழா இன்று (2-ந் தேதி) காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதில் மார்கழி, சித்திரை, மாசி ஆகிய திருவிழாக்கள் சிவபெருமாளுக்கும், ஆவணி திருவிழா விஷ்ணு சுவாமிக்கும் நடக்கிறது. சைவம் மற்றும் வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் அடுத்தடுத்த சன்னிதானங் களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

    விஷ்ணு சுவாமி திரு வேங்கட விண்ணவரம் பெருமாள் என அழைக் கப்படுகிறார். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் மற்றும் திருவனந்தபுரம் பத்ம நாபசுவாமி போல் இங்குள்ள விஷ்ணு சுவாமி யும் 8 மருந்து கலவை சேர்ந்த கடுசர்க்கரை யோகத்தினால் செய்யப்பட்டு உள்ளார். இங்கு சிவன் அபிஷேக பிரியராகவும், விஷ்ணு சுவாமி அலங்கார பிரிய ராகவும் காட்சி அளிக் கின்றனர். இவருக்கும் தனித்தனி கொடிமரங்கள் உள்ளன.

    இன்று கொடியேற்றத் துடன் தொடங்கிய ஆவணி திருவிழாவை யொட்டி தினமும் வாகன பவனி, சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. 9-ம் திருவிழா அன்று தேரோட்டமும்,

    மாலை 4 மணிக்கு விஷ்ணு சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தம்பதி சமேதராக தேரில் எழுந்தரு ளுகிறார். 10-ம் நாள் இரவு கோவில் தெப்பக்குளத்தில் ஆராட்டு வைபவம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×