search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் தண்டுவட நுண்துளை அறுவை சிகிச்சை சங்க சர்வதேச மாநாடு
    X

    நாகர்கோவிலில் தண்டுவட நுண்துளை அறுவை சிகிச்சை சங்க சர்வதேச மாநாடு

    • 10-வது சர்வ தேச மாநாடு 20, 21-ந் தேதிகளில் நாகர்கோவில் தேரேகால்புதூர் கெங்கா கிராண்டியூரில் நடக்கிறது.
    • ஆனால் நுண்துளை சிகிச்சை 45 நிமிடத்தில் இருந்து 1½ மணி நேரத்துக்குள் முடிந்துவிடும். சிகிச்சை முடிந்த 4 மணி நேரத்தில் நோயாளி நடந்து செல்ல முடியும். மறுநாளே அவர் வீட் டிற்கு சென்றுவிடலாம்.

    நாகர்கோவில் :

    உலக தண்டுவட நுண் துளை அறுவை சிகிச்சை சங்கத்தின் 10-வது சர்வ தேச மாநாடு 20, 21-ந் தேதிகளில் நாகர்கோவில் தேரேகால்புதூர் கெங்கா கிராண்டியூரில் நடக்கிறது.

    இந்த மாநாடு கன்னியா குமரி மாவட்ட எலும்பு மூட்டு மருத்துவ சங்கம், தமிழ்நாடு மற்றும் இந்திய எலும்பு மூட்டு மருத்துவ சங்கத்தின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் புதிய நுண்துளை சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத் தப்படுகிறது.

    இதில், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எலும்பு மற்றும் நரம்பு சிகிச்சை நிபுணர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜப்பான் போன்ற நாடு களில் இருந்து ஜூம் மூலம் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இது குறித்து உலக நுண்துளை தண்டுவட சிகிச்சை சங்க செயலாளர் டாக்டர் பி.சி. டேய் கூறிய தாவது:-

    முதுகு தண்டுவடத் தில் சாதாரண அறுவை சிகிச்சை அதிக வலி உண் டாக்குவதாகவும், பெரிய தழும்பு உண்டாக்குவதாக வும், பல நாட்கள் ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற வேண்டியதாகவும் உள் ளது. ஆனால் நுண்துளை சிகிச்சை 45 நிமிடத்தில் இருந்து 1½ மணி நேரத்துக்குள் முடிந்துவிடும். சிகிச்சை முடிந்த 4 மணி நேரத்தில் நோயாளி நடந்து செல்ல முடியும். மறுநாளே அவர் வீட் டிற்கு சென்றுவிடலாம்.

    வெளிநாடுகளில் இருப்பதுபோல் இப்போது இங்கும் நுண்துளை சிகிச்சை கருவிகள், நுணுக்கங்கள் கிடைக்கிறது. தீராத முதுகு வலி, கால் வலி, தண்டுவட சவ்வு பிரச்சனை, முது கெலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் சரி செய்ய முடியும்.

    இந்த சிகிச்சை முறை குறித்த அறிமுகமும், செயல்முறை விளக்க மும் இந்த மாநாட்டில் அளிக்கப்படும். மாநாட் டின் முதல் நாள் தேரே கால்புதூர் டாக்டர் ஸ்ரீநி வாசா ஆஸ்பத்திரியில் 5 பேருக்கு தண்டுவட நுண் துளை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது மாநாட்டில் இருப்பவர்க ளுக்கு நேரடியாக ஒளிப ரப்பு செய்யப்படும்.

    2-வது நாள் இந்த சிகிச்சை முறையில் உள்ள நுட்பங்கள் குறித்து மாநாட்டில் கலந் துகொள்கிறவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிப்பதற்காக திரவியம் ஆஸ்பத்திரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் ஆய்வு கட் டுரைகளும் சமர்ப்பிக்கின் றனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பேட்டியின்போது மாநாட்டின் தலைவர் டாக்டர் ராஜாமணி, செய லாளர் டாக்டர் ஸ்ரீனிவா சன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×