வடிவீஸ்வரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேரடி மூடு பகுதியில் உள்ள புரோட்டா கடையின் மேல் கூரை ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்ததுவீடுகள் முன்பு போடப்பட்டிருந்த சீட்டுகளை அவர்களே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள்.
வடிவீஸ்வரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது. வடிவீஸ்வரம் நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடந்தது.

சுகாதார ஆய்வாளர் ஜான் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மேற்கொண்டனர். தேரடி மூடு பகுதியில் உள்ள புரோட்டா கடையின் மேல் கூரை ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.

அதை மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். இதேபோல் வீடுகள் முன்பு போடப்பட்டிருந்த சீட்டுகளை அவர்களே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள். ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து கோட்டார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com