search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்க பெருஞ்சாணி அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் திறப்பு
    X

    நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்க பெருஞ்சாணி அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் திறப்பு

    • முக்கடலுக்கு இன்று மாலை வந்து சேரும்
    • முக்கடல் வந்து சேரும் தண்ணீரை பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்தி கரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப் பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் கோடை தொடங்கியதையடுத்து படிப்படியாக சரிய தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் சரிந்ததையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேயர் மகேஷ் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

    இதையடுத்து பேச்சிப்பாறை அல்லது பெருஞ் சாணி அணையில் இருந்து தினமும் 50 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெருஞ் சாணி அணை குடிநீருக்காக இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது. அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் புத்தன் அணை, பாண்டியன் கால்வாய், அனந்தனார் சானல் வழியாக முக்கடல் சென்றடையும். இன்று மாலை அல்லது நள்ளிரவு பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கடல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கடல் வந்து சேரும் தண்ணீரை பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முக்கடல் அணை பகுதிக்கு வந்து சேரும் பெருஞ்சாணி தண்ணீரை பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் வரும் பகுதிகளை ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×