அனந்தபுரி ரெயிலை நாகர்கோவில் டவுனுக்கு மாற்றும் திட்டம் மறு பரிசீலனை : விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும்ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்
அனந்தபுரி ரெயிலை நாகர்கோவில் டவுனுக்கு மாற்றும் திட்டம் மறு பரிசீலனை : விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
Published on

நாகர்கோவில்:

விஜய்வசந்த் எம்.பி. அலுவலக செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் நிலவி வரும் பல்வேறு ரெயில்வே பிரச்சினைகள் குறித்து நேற்று விஜய்வசந்த் எம்.பி. சென்னையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா, முதன் மை தலைமை இயக்க மேலாளர் நீனு இட்டியேரா ஆகிேயாரை சந்தித்து மனு அளித்தார்.

மனுவில் கன்னி யாகுமரி வழித்தடத்தில் புதிய ரெயில் இயக்க வேண்டும், இரட்டை ரெயில் பாதை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், கன்னியாகுமரியிலிருந்து வேளாங் கண்ணிக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும், ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலைக் கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை களை விஜய்வசந்த் எம்.பி. முன் வைத்தார்.

மேலும் அனந்தபுரி ரெயிலை நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com