என் மலர்
உள்ளூர் செய்திகள்

திங்கள் நகர் பேரூராட்சியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- பொதுமக்கள் கொட்டும் மழையில் திங்கள் நகர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்
- பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது
கன்னியாகுமரி :
திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட மேல்கரையில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் தலைவர் அஸ்வின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையில் திங்கள் நகர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், எங்கள் ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தொடர்ந்து ஏற்படும் கதிர் வீச்சு காரணமாக பறவை இனங்கள் அழிந்து விடும்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி இங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் பேரூராட்சி கவுன்சிலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






