search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.45 அடியாக உயர்வு
    X

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.45 அடியாக உயர்வு

    • குழித்துறை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • பேச்சிப்பாறையில் 67.4 மி.மீ. மழை பதிவு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை அணை பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 67.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கனமழை கொட்டி தீர்த்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கணிச மான அளவு உயர்ந்துள் ளது. இதனால் அணை களின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியை நெருங்கி வருகிறது. இதை யடுத்து அணையின் நீர்மட் டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டமும் 71.45 அடியை எட்டியது. அணை யின் நீர்மட்டம் 71 அடியை கடந்ததையடுத்து அருவிக்க ரை, திருவட்டார் மற்றும் குழித்துறை ஆற்றின் கரை யோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றின் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவு றுத்தி வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.87 அடியாக உள்ளது. அணைக்கு 1494 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 227 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.45 அடியாக உள்ளது. அணைக்கு 1197 தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.40 அடியாக வும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.49 அடியாகவும், பொய்கை அணை நீர்மட் டம் 17 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர் மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 13.60 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-67.4, பெருஞ்சாணி-44, சிற்றார்-1-55.2 பூதப்பாண்டி- 7.2, கன்னிமார்-8.8, புத்தன் அணை-43, சுருளோடு-18.4, பாலமோர்-27.4, திற்பரப்பு-7.4, அடையா மடை-2.

    Next Story
    ×