தக்கலையில் போதகர் விஷம் குடித்து தற்கொலை

சிவன் கோவில் அருகில் விஷம் அருந்திய நிலையில் ஒருவர் கிடப்பதாக கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கிடைத்ததுவிசாரணை செய்ததில் குடும்ப பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தக்கலையில் போதகர் விஷம் குடித்து தற்கொலை
Published on

கன்னியாகுமரி :

தக்கலை அருகே முட்டைக்காடு பண்ணிபாகம் சிவன் கோவில் அருகில் விஷம் அருந்திய நிலையில் ஒருவர் கிடப்பதாக கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அந்த நபர் இறந்து கிடப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் உடலை கைபற்றி தக்கலை அரசுமருத்துவமனை யில் பிரேத பரிசோதனை செய்ய ஒப்படைத்தனர். பின்னர் இவர் யார் என விசாரணை செய்ததில் முளகுமூடு முப்பதாங்கல் பகுதியை சேர்ந்த அமலராஜேஷ் (வயது 34) கிறிஸ்தவ மத போதகராக உள்ளார் என தெரியவந்தது. இது குறித்து விசாரணை செய்ததில் குடும்ப பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com