திருவட்டார் அருகே தீயில் கருகிய மூதாட்டி சாவு

உடல்நலக் குறைவுடன் வீட்டில் இருந்த சுலோசனா, நேற்று மாலை வீட்டில் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த விளக்கை தட்டி விட்டுள்ளார்.திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார் அருகே தீயில் கருகிய மூதாட்டி சாவு
Published on

கன்னியாகுமரி ;

திருவட்டார் அருகே உள்ள குட்டக்குழி காலனி காட்டாத்துரை பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மனைவி சுலோ சனா (வயது 65). உடல்நலக் குறைவுடன் வீட்டில் இருந்த சுலோசனா, நேற்று மாலை வீட்டில் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த விளக்கை தட்டி விட்டுள்ளார். அப்போது விளக்கு தீ, சுலோசனா உடையில் பிடித்தது. இதில் அவரும் தீயில் கருகினார். அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடல் கருகிய சுலோசனாவை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுலோசனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜு புகாரின் பேரில், திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com